எல்லா பூனையும் குட்டி போட்டதும் ஒரு குட்டியை சாப்பிடுமாம் - வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான  ‘ஃபால்’.. டிரெய்லர் 

 
1

அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் புதிய வெப் தொடர் ‘ஃபால்’. இந்த வெப் தொடரை இயக்கியுள்ள சித்தார்த் ராமசாமி, ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார். இந்த தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மைக்கேல் ஆலன் எழுத்தில் ‘வெர்டிஜ்’ என்ற கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இது உருவாகியுள்ளது

திவ்யா கதாபாத்திரத்தில் இளம் பெண்ணாக நடித்துள்ள அஞ்சலி, தற்கொலைக்கு முயல்கிறார். அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதற்கு முன்னர் நடந்த எந்த சம்பவமும் நினைவில் இல்லை. தன்னுடைய மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயலும் கதைக்களம் இந்த வெப் தொடர். 

இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் இந்த வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

From Around the web