பிரபல பாலிவுட் நடிகையின் தாயார் காலமானார்..!!
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளை கிளப்பி வரும் ராக்கி சாவந்த் சமீபத்தில் அழுது கொண்டே மிகவும் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய தாயார் ப்ரெயின் ட்யூமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதோடு, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தன்னுடைய தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சொல்லவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இவர் தமிழில், ‘என் சகியே’, ‘முத்திரை’ படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இந்நிலையில், புற்றுநோயுடன் போராடி வந்த அவர், நேற்று உயிரிழந்தார். புற்றுநோய் அவரது உடலில் நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றிலும் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாயின் மரணத்தை தாங்க முடியாத ராக்கி சாவந்த் கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராக்கி சாவந்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.