பிரபல கேஜிஎஃப் நடிகர் கிருஷ்ணா ராவ் காலமானார்!! 

 
1

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ். இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர், கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா, கிரிட்டிகல் கீர்த்தனானே, நானோ நாராயணப்பா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

RIP

துமகூரின் பாவகடாவைச் சேர்ந்த கிருஷ்ணா ஜி ராவ், கடந்த வாரம் உறவினர் வீட்டுக்குச் சென்றபோது சோர்வாக இருந்ததால் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, பெங்களூரு சீதா சர்க்கிள் அருகே உள்ள விநாயகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web