பிரபல குக்வித் கோமாளி புகழ் திடீர் திருமணம்!! குவியும் வாழ்த்துகள்!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்வித் கோமாளி ரியாலிட்டி ஷோவின் முக்கிய கோமாளியாக வலம் வருபவர் புகழ். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்த அவர் நடிகர் அஜித்குமாரின் வலிமை உள்ளிட்ட திரைப்படத்தில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் புகழ் தனது காதலி பென்சி ரியா குறித்த ரகசியத்தை போட்டு உடைத்தார். மேலும் விரைவில் எங்களின் திருமணம் நடைபெறும் என்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதைத்தொடர்ந்து புகழின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் காத்திருந்த வேளையில், திடீரென்று சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துள்ளார் புகழ்.

நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி திடீரென்று திருமணம் செய்து கொண்டீர்களே? திருமண தேதி குறித்து நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த எங்களை இப்படி ஏமாற்றலாமா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  தற்போது புகழ்- பென்சி ரியாவின் திருமண புகைப்படங்கள் டிரெண்டிடாகி வருகிறது.

ரசிகர்கள் புகழின் திருமண புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல், தங்களது வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் பல இன்னல்களை சந்தித்து குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவின் தனது இயல்பான நகைச்சுவையால் அதிகளவு ரசிகர்களை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web