பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

 
1

மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன். 37 வயதே ஆன சரத் சந்திரன் டப்பிங் கலைஞராகவும் இருந்தார்.  கடந்த 2016-ஆம் ஆண்டு  வெளியான 'அனீசியா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய சரத் சந்திரன், ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 'கூடே', 'ஒரு மெக்சிகன் அபரதா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

1

கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன். இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

சரத் சந்திரனின் மரணம் குறித்த தகவலை அங்கமலி டைரிஸ் படத்தில் அவருடன் நடித்த ஆண்டனி வர்க்கீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் RIP brother என அவருடைய போட்டோக்களுடன் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

From Around the web