பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் காலமானார்..!!

 
1

திருச்சூரில் நாடகத் துறையில் தீவிரமாக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார் பாபுராஜ் வாழப்பள்ளி. அதன்பின் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், சிஐஏ, மாஸ்டர் பீஸ், குண்டா ஜெயன், பிரேக்கிங் நியூஸ், மனோஹரம், அர்ச்சனா 31 நாட் அவுட் போன்ற பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

baburaj-vazhappally

மேலும், காயம்குளம் கொச்சுன்னி, மின்னுக்கெட்டு, நந்தனம், ஐயப்பனும் வாவரும், தச்சோளி ஒத்தேனன், ஹரிசந்தனம், குஞ்சாலி மரக்கார் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பாபுராஜ் நடிப்பு, வசனம் எழுதுதல், கலை இயக்கம், தியேட்டர் டைரக்ஷன், லைட் டிசைனிங் என அனைத்து துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

திருச்சூர் வாழப்பள்ளியைச் சேர்ந்த பாபுராஜ் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர்.

RIP

பாபுராஜ் வாழப்பள்ளி மறைவை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web