பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜான் வர்கீஸ் காலமானார்..!!

 
1

கேரளாவில் புகழ்பெற்ற ராக் இசைக் கலைஞர்களில் ஒருவர் ஜான்.பி.வர்கி. லண்டனில் இசை பயிற்சியில் 8 கிரேட் முடித்த முதல் மலையாளி. ஏராளமான ராக் இசை கச்சேரிகளை நடத்தி உள்ள இவர் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு புரோசன் என்ற இந்தி படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.

John-Varkey

அதன்பிறகு இடி சங்கத்தி, என்ற தெலுங்கு படத்திற்கும், கார்த்திக் என்ற கன்னட படத்திற்கும் இசை அமைத்தார். 2013-ம் ஆண்டு ஒலிப்பொரு படத்தின் மூலம் கேரள திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, கம்மடிபாடம், பென்கோடி, ஈடா உள்ளிட்ட பல மலையாள படங்களுக்கு இசையமைத்து உள்ளர்.

RIP

திரைப்பட விழாக்களில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜான் வர்கி மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

From Around the web