பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்..!

 
1
தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் சக்கரவர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62.

தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என்று பல முன்னணி நடிகர்களுடன், ’ரிஷிமூலம், ‘முள்ளில்லாத ரோஜா’ உள்ளிட்ட 80 திரைப்படங்களும் மேல் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்கரவர்த்தி. இவர் சினிமாவில் இருந்து விலகி  மும்பையில் வசித்து வந்தார்.
Senior actor chakravarthi 62 dies of heart attack today in Mumbai - தமிழ்  திரைப்பட மூத்த நடிகர் சக்ரவர்த்தி காலமானார்… திரைத்துறையினர் அஞ்சலி –  News18 Tamil
அத்துடன், சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். அத்துடன், சக்கரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது. காலையில் அவருடைய மனைவி லலிதா அவரை எழுப்பிய போது தான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

மறைந்த சக்கரவர்த்திக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார் அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். சசிகுமார், மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.

சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web