பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்..!! குவியும் வாழ்த்துகள்!! 

 
1

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவரின் உண்மையான பெயர் ஷாம்னா கசிம். கேரளாவை சேர்ந்த இவர், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Poorna

2021-ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற படத்திலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை பூர்ணா தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web