பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்..?
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் ஆதி. ‘மிருகம்’ படத்தின் கதாநாயனாக அறிமுகமான அவர், ஈரம் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இணைந்து யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.
முக்கிய நட்சத்திரமாக வலம் வந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த மே மாதம் சென்னையில் கோலகலமாக திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள திருமணம் நடைபெற்றது. அதையடுத்து திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
இந்நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து நிக்கி கல்ராணி – ஆதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.