சொந்தமாக ரெஸ்டாரண்ட் தொடங்கும் பிரபல தமிழ் நடிகை..!!

 
1

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். 'பொம்மை', 'பத்து தல', 'அகிலன்', 'டிமான்ட்டி காலனி 2', ருத்ரன் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. 

பிசியான நடிகையாக திரையுலகில் வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், சமீபத்தில் பீச் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருந்தார். இது குறித்து குறிப்பிட்டிருந்த அவர், எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிதாக ரெஸ்டாரன்ட் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். அந்த ரெஸ்டாரன்ட்டிற்கு LIAM's Dinner என பெயரிடப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், எங்களுடைய சொந்த உணவகம் இது. கனவாக இருந்த ஒன்று தற்போது நனவாகியுள்ளது. இந்த உணவகத்தை திறப்பதற்கான நாள் நெருங்கி வருவதால் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய காத்திருக்கிறோம். LIAM's Dinner விரைவில் சேவை என்று அவர் தெரிவித்துள்ளார். 


 

From Around the web