இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் இயக்குனர்..!!
தனது வித்தியாசமான நடிப்பாலும், பாடலாலும் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.ராஜா ராணி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகங்களை கொண்டவர். மான்கராத்தே, ரெமோ, க பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். பீட்சா, தெறி, காக்கி சட்டை, பென்சில், ஜிகர்தண்டா, கவண் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் எழுதி பாடிய கபாலி படத்தில் இடம் பெற்றிருந்த நெருப்புடா பாடல் இவரை பிரபலமடைய செய்தது.கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண்ராஜா காமராஜ் ஐஷ்வர்யா ராஜேஷை வைத்து கனா என்ற திரைப்படத்தை இயக்கியவர்.இதையடுத்து உதயநிதி நடிப்பில் அவர் இயக்கிய 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கொரானா காலத்தில் அருண்ராஜா காமராஜாவுக்கும், அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் பூரண குணமடைந்தார். ஆனால் மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
மனைவி இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜர் தவித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரின் வற்புறுத்திலின் ஒரு பெண்ணை கடந்த 29-ஆம் தேதி அருண் ராஜா காமராஜ் திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.