பிரபல டைட்டானிக் பட நடிகர் காலமானார்..!!

 
1

1962-ல் மேடை நாடகத்தில் அறிமுகமானவர் டேவிட் வார்னர் (85), 1964-ல் வெஸ்ட் எண்டின் ஆல்ட்விச் தியேட்டர்ஸ் வெளியிட்ட தி வார்ஸ் ஆஃப் தி ரோசஸ் சைக்கிளில் ஹென்றி VI ஆக நடித்தார். அதன் பின்னர், பீட்டர் ஹாலின் 1965-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹேம்லெட்டில் அவரை இளவரசர் ஹேம்லெட்டாக நடிக்க வைத்தார்.

Actor-David-warner

அதனைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு பிரிட்டிஷ் திரைப்படமான மோர்கன்: எ சூடபிள் கேஸ் ஃபார் ட்ரீட்மென்டில் நடப்பின் மூலம் அவர் திரையுலகில் பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1978-ம் ஆண்டு 'ஹோலோகாஸ்ட்' என்ற குறுந் தொடரில் நடித்ததற்காக எம்மிக்கு பரிந்துரைக்கப்பட்டார், மேலும் 1981 குறுந்தொடரில் ரோமானிய அரசியல் சந்தர்ப்பவாதியான பொம்போனியஸ் பால்கோவாக நடித்ததற்காக எம்மி விருதை வென்றார்.

ஜேம்ஸ் கேமரூனின் 1997 காவியமான 'டைட்டானிக்' படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு வெளியான 'பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்', 2005-ல் வெளியான 'லேடீஸ் இன் லாவெண்டர்' படத்திலும் நடித்துள்ளார்.

1

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த பேட்டியில், ‘கடந்த 18 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்தார். அதனால் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை கூட சந்திக்கவில்லை. மிகவும் இரக்கமுள்ள மனிதர்; அவரது மறைவால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்’ என்று கூறினர். டேவிட் வார்னருக்கு மனைவி லிசா போவர்மேன் மற்றும் மகன் லூக் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web