'D3’ படத்தில் நிர்வாணமாக நடித்த பிரபல விஜய் டிவி நடிகர்..!! 

 
1

பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் - ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம்  ' D3’.விஜய் டிவி சீரியல் நடிகரான பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றது.அப்போது பேசிய நடிகர் பிரிஜின், டி3 படத்தில் நிர்வாணமாக நடித்ததை ஓபனாக பேசினார். "நான் சினிமாவில் 19 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன் .நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை. பாதியில் நின்று போனதில்லை. நான் முதல் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன். 

1

எனது அப்பா காவல்துறையில் இருந்தவர் தான். தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை. இது  ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக இயக்குனர் கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்" என தெரிவித்தார்.  

ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறது. 

 

From Around the web