பிரபல நடிகர் கடலி ஜெயசாரதி காலமானார்!!

 
1

1961-ம் ஆண்டு வெளியான ‘சீதாராம கல்யாணம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கடலி ஜெயசாரதி. அதனைத் தொடர்ந்து ஜகன் மோகினி, பக்த கண்ணப்பா, டிரைவர் ராமுடு, குடாச்சாரி நம்பர் 1 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக 372க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Jagan-Mohini

மேலும், தர்மத்மதுடு, அக்கிராஜு, ஸ்ரீராம்சந்திரதுடு படங்களைத் தயாரித்தார். சென்னையில் இருந்து தெலுங்கு சினிமாவை ஐதராபாத்துக்கு மாற்றுவதில் தீவிர பங்காற்றியவர் கடலி ஜெயசாரதி. ஆந்திர சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன பொருளாளராகவும் பணியாற்றினார்.

ஐதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலப்பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

RIP

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From Around the web