பிரபல நடிகர் தீனா தனது குடும்பத்துடன் மதம் மாறினார்.. எந்த மதம் தெரியுமா ?

2004-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விருமாண்டி’ படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தீனா. அதன் பின்னர் சில சில வேடங்களிலும், சண்டைக் கலைஞராகவும் நடித்து வந்தார். ஷங்கரின் எந்திரன் படத்திலும், விஜய்யின் தெறி படத்திலும், தனுஷின் வட சென்னை படத்திலும் நடித்து புகழ்பெற்றார்.
நடிகர் தீனா மேற்கூறிய படங்கள் மட்டுமின்றி ராஜா ராணி, மாநகரம், மெர்சல், பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் இவர் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திமிரு புடிச்சவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.
நடிகர் தீனா படங்களில் சண்டைக்கலைஞராக நடித்தாலும், தனிப்பட்ட பேட்டிகளில் அவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். வில்லன் என்பவன் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை தெறிக்கும்.
இந்நிலையில், நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். புத்த துறவி பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார். தற்போது, அவர் குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.