பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்..!!

 
1

1959-ல் வெளியான ‘சிப்பாயி குத்துரு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாவர் கைகலா சத்யநாராயணா. இவர் மூத்த ஹீரோ என்டிஆருக்கு டூப்பாக நடித்தவர். தமிழில் கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா. பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

Kaikala Satyanaryana

தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019-ல் வெளியான மகேஷ்பாபுவின் மகிரிஷி படத்தில் நடித்து இருந்தார். மேலும், ராமா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி கோடாம சிம்ஹம், பங்காரு குடும்பம், முத்துலா மொகுடு போன்ற படங்களை தயாரித்தார்.

இவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 11வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் 2011-ல் ரகுபதி வெஙெகையா விருதும், 2017-ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

RIP

கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள பிலிம்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காலமானார்.

கைகாலாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ரசிகர்கள் பார்வைக்காக பிலிம்நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மகாபிரஸ்தானில் நடைபெறும்.

From Around the web