விஜய், அஜித் படங்களில் நடித்த பிரபல நடிகர் காலமானார்..!!

 
1

தமிழில் வெற்றிவிழா, சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சலீம் கவுஸ்.இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சலீம் கவுஸ்.இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சலீம் கவுஸ் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் வெற்றிவேல் படத்தின் மூலம் ஜிந்தா கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் சின்ன கவுண்டர் படத்திலும் சக்கரை கவுண்டர் ஆக நடித்து அசத்தியிருந்தார்.

சலீம் கவுஸ் கமலுடன் வெற்றி விழா, கார்த்திக்குடன் சீமான், சத்யராஜுடன் மகுடம், பிரபுவுடன் தர்மசீலன், பிரசாந்துடன் திருடா திருடா, சரத்குமாருடன் சாணக்கியா, அஜித்துடன் ரெட், விஜய்யுடன் வேட்டைக்காரன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.

From Around the web