பிரபல நடிகரின் தந்தை காலமானார்..!! திரையுலகினர் இரங்கல் 

 
1

எதிர்நீச்சல் படத்தில் நடித்தவர் சரத் லோஹிதஸ்வா. இவர் நடிகை நந்திதா தந்தையாக நடித்திருப்பார்.  இவரின் தந்தையும் மூத்த திரைப்பட நடிகருமான லோஹிதாஸ்வா, மாரடைப்பால் பெங்களூரில் காலமானார்.

கன்னட திரையுலகின் மூத்த நடிகர் லோஹிதாஸ்வா, பெங்களூரில் வசித்து வந்தார். இவருக்கு, கடந்த அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

1

நடிகர் லோஹிதாஸ்வா, திரைப்பட நடிகர் மட்டுமின்றி, நுாற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தவர். ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியவர். அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, சிம்ஹத மரி, மூரு ஜன்மா, டைம் பாம் உட்பட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். 

டிவி தொடர்களிலும் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது இறப்பிற்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From Around the web