பிரபல நடிகரின் அக்காவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவர் விருது..!!

 
1

மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவிற்கு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள செய்தியில், ''எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். எங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறந்த மருத்துவர் விருதுக்காக வாழ்த்துகள் அக்கா. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அப்பா நிச்சயம் பெருமைகொள்வார். உனது நேர்மையும், உழைப்பும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web