பிரபல நடிகை ஸ்ரீபிரியா தாயாரும் தயாரிப்பாளருமான கிரிஜா காலமானார்..!!

 
1

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீப்ரியா.குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்களில் நடித்து, பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

Sripriya-mother

1974-ல் பி.மாதவன் இயக்கத்தில் வெளியான ‘முருகற் காட்டிய வழி’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா (88) உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரிசாமியின் மனைவியான இவர், ‘காதோடு தான் நான் பேசுவேன்’ படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாக பணியாற்றினார். 

RIP

அதன்பின் அவரது மகள் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான நீயா, நட்சத்திரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

From Around the web