தெருவில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகை!! வைரல் வீடியோ..!!

 
1

கடந்த 27 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் நடித்து வந்தவர் நடிகை நுபுர் அலங்கர் (49). இவர் ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘சக்திமான்’ உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் அலங்கார் ஸ்ரீவத்சவாவும் நடிகர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நுபுர் அலங்கர் சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசியாகி இருப்பதாகத் தெரிவித்தார். “எனக்கு ஆன்மீக நாட்டம் எப்போதும் இருந்து வந்தது. இப்போதுதான் முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். தேவையானவர்களுக்கு உதவுகிறேன். நடித்துக் கொண்டிருந்தபோது, புகழ், வெற்றி பற்றி எல்லாம் கவலைப்பட்டேன். இன்று அந்த பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். இது என் விருப்பம் இதுதான். இனி என் வாழ்க்கையில் சினிமாவில் இருக்காது” என தெரிவித்துள்ளார்.” என தெரிவித்தார்.

actor

இந்த நிலையில், தற்போது உத்திரப்பிரதேசம் கோவர்தனில் உள்ள தங்கடி அருகே நுபுர் அலங்கர் காவி உடை அணிந்து பிச்சை எடுத்தபடி இருக்கும் புகைப்படமும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நுபுர் அலங்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் தனது வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் தெருக்களில் பிச்சை எடுக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் நடிகை நாள் முழுவதும் 11 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று கூறுவதைக் காணலாம். வீடியோவைத் தவிர, நுபுர் தனது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படத்தில், நுபுர் ஒருவரிடமிருந்து பிச்சை எடுப்பதைக் காணலாம், மற்றொரு புகைப்படத்தில் அவர் தனது பிச்சைக் கிண்ணத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் இது தனது முதல் பிச்சை என்று தலைப்பில் கூறியுள்ளார். 

இது குறித்து நுபர் அலங்கர் கூறுகையில், “சில காலமாக எனது குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த சமயத்தில் எனது குருவின் ஆலோசனையால் நான் சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டேன். பிச்சை எடுப்பதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. தற்போது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது” என்றார்.

From Around the web