வாடகை வீட்டில் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! வீட்டுக்குள் சிக்கிய கடிதம்!

 
1

ஒடிசா மாநில தொலைகாட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரஷ்மிரேகா ஓஜா (23). இவர் நயபள்ளி பகுதியில் உள்ள கடசாஹியில் வாடகை வீட்டில் தனது காதலரான சந்தோஷ் பத்ராவுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) ரஷ்மிரேகா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், தூக்கில் தொங்கியபடி இருந்த  ரஷ்மிரேகா ஓஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நடிகை தங்கியிருந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

Rashmirekha

அதில், ஐ லவ் யூ சான் பேபி என தனது காதலர் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி வைத்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின், ரஷ்மிரேகா ஓஜாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜகத்சிங்பூரின் திர்டோல் பகுதியைச் சேர்ந்த ரஷ்மிரேகா, தனது காதலரான சந்தோஷ் பத்ராவுடன் ஒன்றரை மாதங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பின்னர், இருவரும் பிரிந்துவிட்டதாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

suicide

இதற்கிடையில், ரஷ்மிரேகாவின் தந்தை, தனது மகளிடன் மரணத்திற்கு சந்தோஷ் பத்ரா தான் காரணம் என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்மிரேகாவின் தந்தை கூறுகையில், சந்தோஷ் பத்ராவும், ரஷ்மியும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாக அவர்களது வீட்டு உரிமையாளர் கூறினார். அவரது திருமணம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அந்த தற்கொலைக் குறிப்பை எழுதியது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இருவரும் திருமணமானவர்கள் என்றால் சந்தோஷ்தான் கொலையாளி. விசாரணை நடத்தி அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என்று கூறினார்.

From Around the web