பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை!! குவியும் வாழ்த்துக்கள்!!

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். கடந்த 2007-ம் ஆண்டு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான 'சாவரியா' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி பாலிவுட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜன்னா' படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் 'அம்பிகாபதி' என்னும் பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் நடிகை சோனம் கபூருக்கு இன்று (20.08.2022) ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை நீது கபூர் இன்ஸ்டாகிராமில் தனது வாழ்த்துக்களை சோனத்தின் பெற்றோர்களான அனில் மற்றும் சுனிதா கபூருடன் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்த சோனம் கபூர் மற்றும் ஆனந்தின் அறிக்கையையும் நீது கபூர் பகிர்ந்துள்ளார். அதில், "20.08.2022 அன்று, எங்கள் அழகான ஆண் குழந்தையை நாங்கள் குனிந்த தலையுடனும் இதயத்துடனும் வரவேற்றோம். இந்த பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. இது ஆரம்பம் மட்டுமே எங்கள் வாழ்க்கை நிரந்தரமானது என்று எங்களுக்குத் தெரியும். - சோனம் மற்றும் ஆனந்த்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.