கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை .! மகளுக்கு மருத்துமனையில் சிகிச்சை..!!

 
1

 ‘உழவன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதன்பின் 1996-ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழை அள்ளின்னார். அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோசஸ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Rambha

நடிகை ரம்பாவிற்கு இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து நடிகை ரம்பா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது.  இந்த விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.  நானும் என் ஆயாவும் சிறு காயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டுவிட்டோம்.     என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள் கெட்ட நேரம். எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web