இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை!!

 
1
2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நமீதா .அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதையடுத்து தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.

அத்துடன் ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். தொடர்ந்து மக்களின் விருப்பமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் மக்களிடம் வரவேற்பு பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.

2017-ம் ஆண்டு நமீதா தனது வாழ்க்கை நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது பிறந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக  அறிவித்தார். அத்துடன் கர்ப்ப கால புகைப்படங்களையும் விதவிதமாக எடுத்து ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை நமீதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

நமீதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

From Around the web