பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி.. பேச்சே வரலயாம்..!!

 
1

‘பிக் பாஸ்’ புகழ் உர்ஃபி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

Uorfi Javed

அதேசமயம், தன்னுடைய அதிரடிகளால் பலரின் மனதையும் சில சமயம் காயப்படுத்தியும் இருக்கிறார். அடிக்கடி ஆபாச மற்றும் வித்தியாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுத்து வந்ததால், எந்நேரமும் இவர் லைம்லைட்டிலேயே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உர்ஃபி ஜாவேத்துக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்சமயம் துபாயில் இருக்கும் உர்ஃபி ஜாவேத்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Uorfi Javed

இதுதொடர்பான வீடியோ பதிவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உர்ஃபி ஜாவேத் ஷேர் செய்துள்ளார்.. அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்களும், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசும்போது, உர்ஃபி ஜாவேத்தின் குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்பி பேச முயல்கிறார்,. ஆனால் அவரால் பேசமுடியவில்லை. உர்பியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web