சீரியலில் இருந்து பிரேக் எடுக்கும் பிரபல நடிகை..!! யார் தெரியுமா ?
Dec 23, 2022, 11:05 IST

யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகி வெண்ணிலா கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் ரசிகர்களால் வெண்ணிலா என்று செல்லமாக அழைக்கப்படும் நக்சத்திரா.
இந்த வருடத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நக்சத்திராவிற்கு திருமணம் முடிந்தது. மிக எளிமையாக நக்சத்திராவின் திருமணம் நடந்தது. இவரது திருமணம் பேசு பொருளாக மாறியது அதற்கு காரணம் சீரியல் நடிகை ஸ்ரீநிதி வெளியிட்ட கருத்துதான். ஆனால் அதற்கும், திருமணத்திற்கு பிறகு பல பேட்டிகள் மூலமாக விளக்கம் கொடுத்தார் நக்சத்திரா.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் கூட வள்ளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நக்சத்திரா தற்போது அந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . .ஆனால் அதை குறித்து நக்சத்திரா இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை கூறவில்லை என்றாலும் அவருடைய தோழிகள் அவரை சென்று பார்த்த வண்ணமாகவே இருக்கின்றனர். இந்த தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.