லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் பாணியில் பிரபல தொழில் அதிபர் மகன் சினிமாவில் நாயகனாகிறார்..!! 
 

 
1

கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தனன் ரெட்டி, எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய நபராக வலம் வந்தார். இவருடைய மகன் க்ரீட்டி என்பவர் தான் தற்போது கன்னட சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு ஜூனியர் என பெயர் வைத்துள்ள நிலையில் ராதாகிருஷ்ணன் ரெட்டி என்பவர் படத்தை இயக்குனர். ஆக்ஷன் த்ரில்லராக தயாராகும் இந்த படத்தில் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செந்தில்குமார் என்பவரை இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஆக்ஷன் திரில்ல படம் என்பதால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக உள்ள பீட்டர் ஹெய்ன் இந்த படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இதர தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது 

 

From Around the web