பிரபல குணச்சித்திர நடிகருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு..!!
ஜேஜே, ஆனந்தம், திருப்பாச்சி போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சசிகுமார் சுப்ரமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், கமலஹாசன், சரத்குமார், மாதவன், பிரகாஷ் ராஜ், சுந்தர் சி போன்ற நடிகர்கள் நடித்த படங்களில் துணை கதாபாத்திரமாகவும், நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்திலும், குணசித்திர நடிகராகவும் நடித்திருப்பார் .
தமிழ் நாட்டில் அரசியல் காட்சிகளில் ஒன்றான பாஜகவில் மற்ற கட்சி நபர்களை தவிர்த்து பல சினிமா பிரபலங்கள் சில முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரையும் பாஜக தன்னுடைய கட்சியில் சேர்த்து வருகிறது, அந்த வகையில் காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், மதுவந்தி, நமிதா, ரகுராம், ராதாரவி, இயக்குனர் பேரரசு போன்ற சினிமா பிரபலங்கள் கட்சியில் முக்கியமான நிர்வாக பொறுப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக அரசியலில் இருந்து வந்த காயத்ரி ரகுராம் கடந்த சில மதங்களுக்கு முன்னே சூர்யா சிவா மற்றும் டெய்சி விவகாரத்தில் சிக்கி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தமிழ் நாட்டில் வெளிமாநில மற்றும் அண்டைநாட்டு மாநில தமிழ் வளர்ச்சி தலைவராக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பேரரசு சினிமாவில் என்றும், துணை மாநில தமிழ் வளர்ச்சி தலைவர்களாக சுறா.என்.முரளித்தாஸ், சுகு பூப்பாண்டியன், எஸ்.வி. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட மூவரும் நியமிக்கப் படுவார்கள் என்று தமிழ் நாட்டில் பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குணசித்திர நடிகராக நடித்திருந்த சசிகுமார் சுப்ரமணியை பாஜக கட்சியின் துணை மாநில பொதுச் செயலாளர் பதவியில் நியமித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Its A Honour To Have Been Appointed As State Secretary Of TNBJP Overseas & Other States Tamil Development Wing..
— BJP Sashi Kumar Subramony /சஷி K சுப்பிரமணி 🇮🇳 (@ActorSashi) December 17, 2022
My Heartfelt Thanks To My State President Shri @annamalai_k Avl For Reposing His Faith In Me..
And A Special Thanks To State GS(Org) Shri @KesavaVinayakan Avl.. pic.twitter.com/86hN6B3mFr
Its A Honour To Have Been Appointed As State Secretary Of TNBJP Overseas & Other States Tamil Development Wing..
— BJP Sashi Kumar Subramony /சஷி K சுப்பிரமணி 🇮🇳 (@ActorSashi) December 17, 2022
My Heartfelt Thanks To My State President Shri @annamalai_k Avl For Reposing His Faith In Me..
And A Special Thanks To State GS(Org) Shri @KesavaVinayakan Avl.. pic.twitter.com/86hN6B3mFr
தனக்கு பாஜகவில் முக்கிய பதவியை வழங்கியதற்கு நன்றி சொல்லும் வகையில் நடிகர் சசிகுமார் சுப்ரமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பக்கத்தில் தமிழக பாஜக கட்சியில் துணை பொதுத்திச்செயலாளர் பதவி வழங்கியதற்கு தன்னுடைய மனமார்ந்த நன்றி எனவும், என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கிய தமிழ் நாடு பாஜக தலைவர் ஸ்ரீ அண்ணாமலை அவர்களுக்கு மிக்க நன்றி என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.