பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது..!!
Jan 29, 2023, 08:05 IST
மாதவரம் சாஸ்திரி நகர் என்ற பகுதியில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகளுடன் வசித்துவரும் நிலையில் அவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று ஆசிரியரின் கார் சேதம் அடைந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நித்யா கற்களை கொண்டு காரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நித்யாவை போலீசார் கைது செய்தனர்.
நித்யா மீது சட்டப்பிரிவு IPC 427 (பிறர் சொத்துக்களை சேதப்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இருப்பினும் இது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால், அவரை காவல்நிலைய பிணையிலேயே விடுவித்திருக்கிறார்கள்.
 - cini express.jpg)