எந்த விநியோகிஸ்தரும் இடைதரகர் பேச்சை கேட்டு 'வாத்தி' படத்தை வாங்காதீங்க - பிரபல நிறுவனம் வேண்டுகோள் !

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. தொழி பிரேமா,  'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது '. இந்தப் படத்தின் மூலம் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்துள்ளார். 

1

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில்,  இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 பகுதியில் படத்தை வெளியிட 8 கோடி ரூபாய் பேசப்பட்டு 3 கோடி ரூபாய் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முன்பணம் கொடுக்கப்பட்டது. தீபாவளி கழித்து ஒப்பந்தம் போடலாம் என்று கூறப்பட்டது. 

ஆனால் அதன்பிறகு ஒப்பந்தமும் போடவில்லை. படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடவும் இல்லை. அதனால் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கேட்டோம். இதையடுத்து வட்டியில்லாமல் 2 கோடியை மட்டும் கொடுத்தனர். பின்னர் மூன்று நாட்கள் கழித்து 1 கோடியை தருவதாக கூறினர். ஆனால் இதுவரை எந்த பணமும் தரவில்லை. சமீபத்தில் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தபோது மீண்டும் ‌‌‌‌‌‌வெளியீட்டு உரிமையை கேட்டோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் எந்த விநியோகிஸ்தரும் இடைதரகர் பேச்சை கேட்டு ஏமாறவேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது. 

From Around the web