பிரபல இயக்குனர் ஹரிச்சரண் சீனிவாசன் காலமானார்..!! 

 
1

பிரபல இயக்குனர் ஹரிச்சரண் சீனிவாசன் மூன்று முறை தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று, அர்ஜுனா விருது பெற்றுள்ள வி. சந்திரசேகர் பயோபிக்கையும்  தமிழில் இயக்கியிருந்தார் ஹரிச்சரண். இது 26 எபிசோடுகளாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஒரு விளையாட்டு பிரபலத்தை மையப்படுத்தி தமிழில் ஒளிபரப்பப்பட்ட முதல் தொலைக்காட்சி சீரியல் என்ற பெருமையையும் இது பெற்றிருந்தது.

இந்நிலையில்  ஹரிச்சரணின் மறைவு, தற்போது திரை உலகை சேர்ந்த பலரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மனைவியான ரேக்ஸ் (Rekhs), சுமார் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்துள்ளார். நடிகர் விஜய்யின் 13 படங்களுக்கு மேல் சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்துள்ள ரேக்ஸ், தற்போது வெளியாகியிருந்த வாரிசு உள்ளிட்ட திரைப்படத்திலும் பணிபுரிந்திருருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன், பாகுபலி, கபாலி, மகரிஷி, விக்ரம் என பல திரைப்படங்களுக்கும் சப்டைட்டிலிஸ்ட் ஆர்டிஸ்ட்டாக ரேக்ஸ் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web