பிரபல இயக்குனருக்கு இன்று நிச்சயதார்த்தம்..!! 

 
1

2017-ல் வெளியான ‘சின் சின் சி’ என்ற குறும்படத்தின் இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ராகுல் ராமச்சந்திரன். அதன்பின் நீயும் நானும் அவனும், ஆதாம் ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 2019-ல் வெளியான ‘ஜீம் பூம் பா’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். தற்போது சுரேஷ் கோபி நடத்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீவித்யா முல்லச்சேரியும் ராகுல் ராமச்சந்திரனும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் நிச்சயதார்த்தம் நாளை (ஜன. 22) நடைபெற உள்ளதாக சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகை ஸ்ரீவித்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சிறந்த பாதியை மிகுந்த ஆர்வத்துடன் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். எங்கள் நிச்சயதார்த்தம் ஜனவரி 22, 2023 அன்று. உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை. அனைத்து செய்திகளுக்கும் நன்றி. எல்லோரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீவித்யா தனது யூடியூப் சேனலில் தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அது இறுதியாக நடக்கிறது. கடந்த 1,825 நாட்களாக என்னுடன் இருந்ததற்கு நன்றி. அதன் ஏற்ற தாழ்வுகள், சச்சரவுகள் அனைத்தும் என் இதயத்தில் பொக்கிஷமாக இருக்கும். அன்புள்ள ஸ்ரீவித்யா, நம் வாழ்வில் ஒன்றாக இருக்க நான் எதிர்நோக்குகிறேன். நான் பார்த்த எல்லா இடங்களுக்கும் இன்னும் பார்க்காத இடங்களுக்கும் வணக்கம் சொல்லுகிறேன், ஐ லவ் யூ. திருமணத்தை அறிவிக்கும் பதிவில், "மேலும் மேலும்" என்று ராகுல் எழுதியுள்ளார்.

சின்ன திரையில் ஸ்டார் மேஜிக் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ஸ்ரீவித்யா, கேம்பஸ் டைரி படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு குட்டநாடன் வலைப்பூ, ஒரு பழைய வெடிகுண்டு கதை, நைட் டிரைவ்., சத்யம் சாஹி போதிபச்சு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

From Around the web