பிரபல இயக்குனர் காலமானார்... திரையுலகினர் இரங்கல்..!! 

 
1
 1984-ம் ஆண்டு வெளியான ‘அக்கரே’ படத்தின் மூலம் மோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார் கே.என்.சசிதரன்.இந்த படத்தில் பரத் கோபி, மாதவி, மம்முட்டி, நெடுமுடி வேணு, மோகன்லால், ராணி பத்மினி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.

Sasidharan

அதனைத் தொடர்ந்து, 1985-ம் ஆண்டு வெளியான ‘கணத்தையா பெண்குட்டி’ குற்ற மர்மம் நிறைந்த படத்தில் பரத் கோபி, ஜெயபாரதி, மம்முட்டி, ராமச்சந்திரன், வி.கே.ஸ்ரீராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கடைசியாக ‘நாயனா’ என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இதில் மியா ஜார்ஜ், அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தனர். விளம்பர இயக்குநராகவும் அறியப்பட்ட இவர், 90-களில் காவ்யா மாதவன் நடிப்பில் ‘வண்ணல்லோ வனமாலா’ என்ற வாஷிங் சோப்பு விளம்பரம் புகழ்பெற்றது. தொடர்ந்து பல விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

RIP

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் வசித்து வந்த சசிதரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று காலமானார். இவருக்கு வீணா சசிதரன் என்ற மனைவியும், ரிது சசிதரன் மற்றும் முகில் சசிதரன் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

From Around the web