பிரபல திரைப்பட நடிகர் டி.பிலிப் காலமானார்..!!

 
1

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியில் நடிகர் டேனியல் பிலிப் என்ற டி.பிலிப் வசித்து வந்தார். தொழில்முறை திரையரங்குகளில் மறக்க முடியாத நடிப்பால் கவனிக்கப்பட்ட பிலிப், 1980-ம் ஆண்டு வெளியான பிரளயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Philip

அதனைத் தொடர்ந்து, கோட்டயம் குஞ்சச்சன்’, ‘வேட்டன்’, ‘அர்த்தம்’, ‘பழசிராஜா’ உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். காளிதாசன் கலகேந்திரா மற்றும் கேபிஏசி நாடகங்களில் முன்னணி நடிகராக இருந்தார்.

கேஜி ஜார்ஜ் இயக்கிய கோலங்கள் படத்தை டி பிலிப் மற்றும் கேடி வர்கீஸ் தயாரித்துள்ளனர். இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் குறிப்பிடத்தக்க பல பாத்திரங்களில் நடித்துள்ளார்.

Philip

கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்தார். இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மகள் வெளிநாட்டில் உள்ளதால் அவர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் நேரம் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web