பிரபல திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி காலமானார்..!!

 
1

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன்கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயணமூர்த்தி.

நடிகர் விசுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் முதல் படமான பூந்தோட்டம் திரைப்படத்தில் அறிமுகமாகி சிகரம் தொட்டவர். தமிழ் திரை உலகில் நவீன காலத்தில் இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காமெடி நடிகர்கள் விவேக், வடிவேல் உள்ளிட்ட வரிசையில் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சிவநாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் அவரது வீட்டில் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டையில் காலமானார்.

தமிழ் முன்னணி நடிகர்கள் சிவாஜி, ரஜினி, விஜய், அஜித், வடிவேல்,விவேக் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன் 218 திரைப்படங்களில் நடித்தவர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன்கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயணமூர்த்தி.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

From Around the web