பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இ. வி. ராஜன் காலமானார்..!!

 
1

ஜெயலலிதா நடித்த குமரிப்பெண்,  சிவாஜி நடித்த தங்கச் சுரங்கம்,  ரஜினியின் குப்பத்து ராஜா , அர்ஜுன் மூவி கல்யாண கச்சேரி உள்ளிட்ட 15 திரைப்படங்களை தயாரித்தவர் இ.வி.ராஜன்.

இ.வி. ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி இவர் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.இவர் பிரபல நடிகை இ.வி.சரோஜாவின் சகோதரர். பிரபல இயக்குநர் டி ஆர் ராமண்ணாவின் மைத்துனர் ஆவார் இ.வி ராஜன்.

83 வயதான இவி ராஜன், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பின் காரணமாக  வரும் உடல் நல குறைவினால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் அவர் காலமாகி இருக்கிறார்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று மதியம் 2 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.   திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் , உறவினர்களும் இவி ராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி,  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web