பிரபல இசையமைப்பாளர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!!

 
11

ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்துக்கு இசையமைத்தன் மூலம் பிரபலம் ஆனவர் இளம் இசையமைப்பாளர் ரகுராம்.

இளம் இசை அமைப்பாளரான ரகுராம் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே, மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு (Stephen Hawking ) பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்ற Geneti நோய் தாக்கியது. இந்த நோய்க்காக அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்தார்.

மேலும் தான் உயிர் வாழ ஒவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் வரை செலவிட வேண்டி இருந்தது. இதற்கான செலவை அவரது தாய் மாமா வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.மேலும் அவர் 32 வயது வரை தான் வாழ்வார் என மருத்துவர்கள் கணித்திருந்தனர். ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய தன்னம்பிக்கையால் 38 வயது வரை அவர் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ரகுராம் உயிரிழந்தார்.

From Around the web