பிரபல இசைக்கலைஞர் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்..!!

 
1

பாரம்பரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான பண்டிட் ஷிவ்குமார் சர்மா, அடுத்த வாரம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். இந்த நிலையில் அவர் சிறுநீரகக் கோளாறுகளாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பத்ம விபூஷன் விருது பெற்ற ஷிவ்குமார் சர்மா ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய பாரம்பரிய இசையை வாசித்த முதல் இசைக்கலைஞர் ஆவார். இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web