சர்க்கார் படத்தில் ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகர் காலமானார்..!!

 
1

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடிவந்தவர் பாடகர் பம்பா பாக்யா. இவர் ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இதன் பின்னர், ரகுமான் இசையில் ‘2.0’ படத்தில் வரும் ‘புள்ளினங்காள்’ பாடல், ‘சர்வம் தாள மயம்’ படத்தில் வரும் பாடல்கள் என பல பாடல்களை பாடினார்.

Bamba-Bakya

தமிழில் குறிப்பிடத்தகுந்த பாடகராக மாறிய பம்பா பாக்யா, ‘பிகில்’ படத்தில் வரும் ‘காலமே காலமே’ பாடலை மிகவும் உருக்கமாக பாடியிருப்பார். அதே போல, சந்தோஷ் தயாநிதி இசையில் பம்பா பாக்யா பாடிய  ‘ராட்டி’ ஆல்பம் பாடல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலின் ஆரம்ப வரிகளை பம்பா பாக்யாதான் பாடி இருப்பார். இது தவிர இன்னொரு பாடலையும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பம்பா பாக்யா பாடி உள்ளார். அவருடைய இறப்பு குறித்த தகவலை ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பதிவிட்டுள்ளார்.

Bamba-Bakya

சென்னையில் பாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த பம்பா பாக்யா, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று இரவு 12.30 மணிஅளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

From Around the web