பிரபல நாடக நடிகையும் நடன இயக்குனரின் தந்தையுமான சின்னா காலமானார்..!!

 
1
நடன இயக்குநராக பணியாற்றியவர் சின்னா. இவர் உடல்நல குறைவால் காலமானார்

அவருக்கு வயது 69. இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், ஜங்கா ரெட்டி கூடம் ஆகும். இவருடைய தந்தை ஐதராபாத்தில் உள்ள இசைக்கல்லூரியில் முதல்வராக இருந்தவர்.

சேஷூ மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த சின்னாவை, இயக்குநர் பாக்யராஜ் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைதார். அதனை தொடர்ந்து ’டார்லிங் டார்லிங் டார்லிங்’, முந்தானை முடிச்சு படங்களில் இவருக்கு வாய்ப்பளித்தார். பாக்யராஜ் சொந்தமாக தயாரித்த ‘தாவணிக்கனவுகள்’ படத்திற்கும் நடன இயக்குநராக பணியாற்றினார்.

chinna

அதனைத்தொடர்ந்து அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி, நேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிஃபர் சின்னாவின் மகள்.

இந்நிலையில் இவரின் தந்தை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து விட்டதாகவும் அவருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சின்ணாவின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web