பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதி..!!

 
1


லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், நட்புன்னா என்னன்னு தெரியுமா?, முறுங்கைக்காய் சிப்ஸ், நளனும் நந்தினியும் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

விடியும் வரை காத்திரு படத்தில் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் இவர்களது திருமணம் பேசுபொருளாக மாறிய நிலையில், ரவீந்தரும் மகாலட்சுமியும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தனர்.

இந்நிலையில், ரவீந்தருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web