பிரபல தயாரிப்பாளர் சாரதா அம்மையார் காலமானார்..!!
Jul 28, 2022, 20:55 IST

மலையாளத்தில் பிரேம்நசீர், மது, மம்முட்டி , கமல்ஹாசன்,உட்பட முன்னணி கதாநாயர்களின் படங்களையும்,, கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த படங்களையும், தமிழில் தனிமரம் என்ற படம் உட்பட 30 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளவர் பிரபல மலையாளத் தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.பி.கொட்டராக்கராவின் மனைவி சாரதா அம்மையார்.
80 வயதான அவர் சென்னையில் அவரது மகன் ரவி கொட்டாரக்கராவுடன் வசித்து வந்தார். ரவி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருக்கிறார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினையில் அவஸ்தைப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.