பிரபல தயாரிப்பாளர் காலமானார்..!!

 
1

மூத்த தெலுங்கு தயாரிப்பாளரும், ஆசியன் குழுமத்தின் தலைவருமான நாராயண் தாஸ் நரங் காலமானார். 

கடந்த சில வாரங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் இன்று பிரிந்தது . தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், நாராயண் தாஸ் நரங் கடந்த நான்கு தசாப்தங்களில் 600 படங்களுக்கு மேல் நிதியளித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு மாலை 4 மணிக்கு மகாபிரஸ்தானத்தில் நடைபெறும் என்றும், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நாராயண் தாஸின் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மகேஷ் பாபு, தனது ட்வீட்டில், தயாரிப்பாளருடன் செலவழித்த சிறப்பு தருணங்களை நினைவு கூர்ந்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.

அதேபோல், தயாரிப்பாளர் நாராயண் தாஸின் மறைவுக்கு சிவகார்த்திகேயனும் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும் . கே.வி.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே 20 படத்தின் தயாரிப்பாளர்களில் நாராயண் தாஸ் நரங் ஒருவர். இயக்குனர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் தயாரிப்பாளரும் நாராயண் தாஸ்தான் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web