பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்..?

 
1

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவு பெற்ற தொடர்தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரு பாகங்களாக ஒளிபரப்பாகி வந்தது.

Deepa

இந்த சீரியலின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள். மக்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு ஒளிபரப்பான நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்டாம் பாகத்தில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை தீபா. இந்த சீரியலில் கிடைத்த பிரபலத்தை வைத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அன்பே சிவம்' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியலிலும் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் ரெக்க கட்டி பறக்குது மனசு, ஆண்டாள் அழகர், பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அவர் நடித்து வரும் அனைத்து சீரியல்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலேயே தோன்றுவதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

Deepa

சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் நடிகை தீபா, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தற்போது தன்னுடைய மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் இவர் கடந்த இரண்டு வருடங்களாக வீடியோ எடிட்டர் சாய் கணேஷ் பாபு என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தீபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பாபா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மை லவ் சாய் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர்களின் காதல் உறுதியாகி உள்ளது. மேலும் வெகு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

From Around the web