பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம் இயற்கைக்கு மாறானது..!! 

 
1

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் தெற்கில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கலந்து கொண்டார். மேடையில் பாடிக்கொண்டு இருந்தபோது திடீரென சரிந்து விழுந்த கே.கே.வை உடனடியாக மீட்டு சிஎம்ஆர்ஐ மருத்துவனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டடதாக தெரிவித்தனர்.

KK

ரசிகர்களால் கே.கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தெலுகு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பின்னணி இசைப் பாடகராகவும், பாப் மற்றும் ராக் இசைப் பாடகராகவும் அறியப்படுகிறார்.

1996-ம் ஆண்டு ‘துனியா தில்வாலோன் கி’ என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான இவர், தமிழில், ‘மின்சார கணவு’ படத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி பெண்ணே’ பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து தமிழில் விஜபி, 12பி, காக்க காக்க, கில்லி உள்ளபட பல படங்களில் பாடியுள்ளார். இவரது பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.மேலும் கிருஷ்ணகுமார் குன்னத் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் உயிரிழந்த கிருஷ்ணகுமார் குன்னத் உடல் இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web