ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க ? சர்ச்சையில் வசமா சிக்கிய பிரபல பாடகி..!

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் லியாங்யின் (38) பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக வலைத்தளத்தில் இவரை 43 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார்.
ஜாங் தனது புத்தாண்டு நிகழ்ச்சியின் போது நோய்த்தொற்றின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னதாகவே கொரோனா பாதிப்பை வேண்டும் என்றே வரவழைக்க விரும்புவதாக கூறினார். “புத்தாண்டு நிகழ்ச்சியின் போது எனது உடல்நிலை பாதிக்கப்படும் என்று நான் கவலைப்பட்டேன். எனவே வைரசிலிருந்து மீள எனக்கு தற்போது நேரம் இருப்பதால் நேர்மறை சோதனை செய்த கொரோனா பாதிப்பு குழுவை நான் சந்தித்தேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அதன்பின் மறுநாள் தனக்கு காய்ச்சல், தொண்டை புண் மற்றும் உடல் வலி ஆகியவை கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்று கூறினார். தனது அறிகுறிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருந்தாலும், அவை ஒரு நாள் மட்டுமே நீடித்ததாக அவர் கூறினார்.
Singer #JaneZhang says that she's worried she'll be sick for New Years concerts, so she decided to visit some covid+ people to get sick and get over it
— 🍉 田里的猹 (@melonconsumer) December 17, 2022
Now she's getting bashed because she said she recovered in 1 day, lost weight and now has good skin😂 pic.twitter.com/wyki8v2wrZ
“ஒரு இரவும் பகலும் தூங்கிய பிறகு, எனது அறிகுறிகள் அனைத்தும் மறைந்துவிட்டன... நான் குணமடைவதற்கு முன்பு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நிறைய தண்ணீர் குடித்தேன் மற்றும் வைட்டமின் சி எடுத்துக் கொண்டேன்” என்று ஜாங் கூறினார்.
இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்தன. விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, ஜாங் முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.