பிரபல இளம் இயக்குநருக்கு ஆண் குழந்தை..! குவியும் வாழ்த்துகள்..!!

 
1

இயக்குநர் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் பாக்யராஜ் கண்ணன். அதன்பின் 2016-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

director

அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான ‘சுல்தான்’ படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பை பெற்றதால் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக அவதரித்தார்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாக்கியராஜ் கண்ணன். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. அடுத்த படத்தினை விரைவில் தொடங்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பாக்கியராஜ் கண்ணன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். பாக்கியராஜ் கண்ணன்-ஆஷா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web