ரசிகர்களே..!! புஷ்பா 2 ஐட்டம் பாட்டுக்கு நோ சொன்ன சமந்தா…அவருக்கு பதில் நடிக்க இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ..?

 
1

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து தெலுங்கில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜூன், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. பான் இந்தியா திரைப்டமாக உருவான இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. 

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இயக்குனர் சுகுமார் முயற்சித்து வருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

1

முதல் பாகத்தில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ என்ற குத்து பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இடம்பெற உள்ளதாம். இந்த பாடலில் நடனமாட உள்ளதாக திஷா பதானி உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால் இறுதியாக மலைகா அரோரா இப்பாடலுக்கு நடனமாட உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.      

From Around the web